லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி கோவில் யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குளவிநாயகர் ஆலயமாகும், இந்த ஆலயத்தில் லட்சுமி…

புதுச்சேரி கோவில் யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குளவிநாயகர் ஆலயமாகும், இந்த
ஆலயத்தில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது, இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது.

தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சிதந்த லட்சுமி காலில் கொலுசு அணிந்தும்
முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் காட்சி தந்து இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது.

இந்த லட்சுமி யானை கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதாக இருக்கும்போது மனக்குள
விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் லட்சுமி வழக்கம்போல்
காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென
மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது.

மக்கள் அஞ்சலிக்காக கோவில் வளாகத்தில் யானை லட்சுமியின் உடல் வைக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த லட்சுமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லட்சுமி உயிரிழந்தது அதிர்ச்சியான செய்தியாகும்.

தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வாள் லட்சுமி. லட்சுமியின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லட்சுமியை அடக்கம் செய்ய அரசு துணை நிற்கும்.

கோவிலில் யானை சரியாக பராமரிக்கப்பட்டு, பாதுகாப்பட்டது. திடீரென ஏற்பட்ட இதய அடைப்பு காரணமாக யானை லட்சுமி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.