“சாமி தரிசன டிக்கெட்டுடன் வந்தால் கணக்கில்லாமல் லட்டு” – #TirupatiTirumala தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதியில் சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “சாமி தரிசன டிக்கெட்டுடன்…

laddoos, devotees ,Sami Darshan ,ticket, TTD Devasthanam, Announcement

திருப்பதியில் சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

“சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டு வழங்கப்படும். நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 என்ற கட்டணத்தில் பக்தர்கள் தேவைப்படும் லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு, ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும். பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டு வழங்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் இருந்துவிட்டது”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று திருமலை – திருப்பதி தேவஸ்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.