லடாக்கில் பர்தாபூர் முகாமிலிருந்து ஹனிஃப் முகாமுக்கு 26 வீரர்களுடன் ராணுவ வாகனம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 வீரர்கள் உயிரிழந்தனர். 12 வீரர்களுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொய்சா பகுதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்து நதியில் விழுந்தது. இதில் 26 வீரர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிறந்த மருத்துவ உதவி கிடைக்க தேவையான அனைத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்