தமிழ் நெட் – புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான 4 ஆம் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.   தலைமைச்செயலகத்தில் தகவல்…

கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான 4 ஆம் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 

தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இது மிகவும் முக்கியமான நாள் என்றார். நீண்ட நாட்களாக கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது என கூறினார்.

 

ஊராட்சிகளில் இணையதள சேவை வழங்கும் 4 தொகுப்புகளாக இணைக்கும் திட்டத்தில், 3 தொகுப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

 

4 ஆம் கட்ட திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திட்டம் முடிவடைந்தவுடன் தமிழ்நெட் என மாற்றம் செய்து ஒருங்கிணைந்த இணைய சேவைக்கான திட்டமாக பரிணமிக்கவுள்ளது. இந்த திட்டம் செயல்பாடுக்கு வந்தவுடன் சாதாரண கிராமத்திலும் இணைய சேவை கிடைக்கும் நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.