மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும், மத்திய இணை மந்திரியாக பணியாற்ற தனக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாகும்.
தினக்கூலித் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும்.
இப்போது, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் பணிக்காக, முழுநேரமும் என்னை அர்ப்பணித்துக்கொண்டு, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்”. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.




