கள்ள ஓட்டு விவகாரத்தில் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் விளக்கம்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.   மத்திய…

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

 

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களிக்க வரும் வேலையில் அவரது பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்ததால் அண்ணாநகர் கிழக்கு வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.