“வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது”; ஹெச்.ராஜா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்து வருகின்றனர். கட்சித் தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது வாக்குகளை செலுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு பணம் இல்லாமல் திவாலாகியுள்ளதாக தெரிவித்தார். திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய அவர் . காவி நிறத்தில் முகக்கவசம் அணிந்து வருபவர்களை தேர்தல் அதிகாரிகள் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்

.
மேலும் “இந்த முறை உள்ளாட்சி நகர்புற தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன
மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பாஜகவிற்கு பெரும்பான்மையான இடம் கிடைக்கும்” என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.