குந்தவை, வந்தியத்தேவன் காதலை பற்றி எனக்கே தெரியாது! – ஆதித்த கரிகாலன்

குந்தவை, வந்தியத்தேவன் காதல் என்ன ஆனது என்பது பற்றி தனக்கே தெரியாது என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட…

குந்தவை, வந்தியத்தேவன் காதல் என்ன ஆனது என்பது பற்றி தனக்கே தெரியாது என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : பொன்னியின் செல்வனை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது! – வந்தியத்தேவன்

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் விக்ரம், “பொன்னியின் செல்வன் 2 படத்தில்,  எல்லோருக்கும் பிடித்த அனைத்து விஷயங்களும் இருக்கு. படம் எல்லோருக்கும் பிடிக்கும். கண்டிப்பாக இரண்டாம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மணி சார் முழுமையாக உற்சாகமாக இருந்தார். சந்தோசமாக படத்தை எடுத்தார். மணி சார் படத்தில் வருவது வால்நட்சத்திரம் போல அதிசயம். இது ஒரு காவியம். இந்த கதையை பாகுபலி மாதிரி பிரம்மாண்டமாக செய்திருக்கலாம். ஆனால் புத்தகத்தின் கதையை அப்படியே மணி சார் எடுத்திருக்கிறார்.

தங்கலான், பொன்னியின் செல்வன் படம் நடித்த பின் இந்த மாதிரி இன்னும் பல
படங்கள் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஓடிடியால் எல்லையே இல்லாமல் பல மொழி படங்களையும் பார்த்து வருகிறோம். மணி சாரின் படத்தில் நடிக்கும் போது நம்மை அறியாத நிறைய விசயங்கள் இருக்கும். மணி சார் நடித்து காட்டவே மாட்டார். இந்த படம் நிறைய ரீச் ஆனாலும் மணி சாரின் ஊக்கம் தான் காரணம். இப்போதும் என்னுடைய ஃபேவரைட் கதாபாத்திரம் ராவணன் தான்.

நிறைய நண்பர்கள், தமிழ் தெரியாத நண்பர்கள் கூட படம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அது பொன்னியின் செல்வன் படத்தில் தான் நிகழ்ந்தது. நிறைய விஷயங்கள் உள்ளது. குந்தவை, வந்தியத்தேவன் காதல் என்ன ஆனது என்பதைப் பற்றியும், ஆதித்ய கரிகாலன் என்ன ஆனார் என்பது பற்றியும் எனக்கே தெரியாது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.