லியோ திரைப்பட வெற்றி எதிரொலி – ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டு கும்பகோணம் காசி திரையரங்கில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் …

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டு கும்பகோணம் காசி திரையரங்கில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்  லியோ கடந்தவாரம் வெளியானது.  வெளியானது முதலே தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோனம் காசி திரையரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றியை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மாநகரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு குடம், போர்வை, காய்கறி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.