நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த இடிந்தகரை கடல் பகுதியில் மீனவர் நிர்மல் ராஜ் என்பவர் அதிகாலை தனது குழுவினருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது 5 நாட்டிக்கள் தொலைவில் ஆளில்லாத படகு ஒன்று மிதந்து செல்வதை கண்டு உள்ளனர்.
இது குறித்து மீனவர் நிர்மல் ராஜ் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் கடற்கரை பகுதிக்குள் சென்று மர்ம படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே விசாரணையில் மர்ம படகு கன்னியாகுமரியில் இருந்து மிதந்து வந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த பொன் அமுதன் என்பவரின் படகு என்றும், விவேகானந்தர் பாறையில் பராமரிப்பு பணிக்கான ஈடுபட்டிருந்த போது கடல் அலையில் அடித்து கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மர்ம படகால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு முழுமையான தகவல் தெரிந்த பின்னர் அடங்கி உள்ளது.
—-கோ. சிவசங்கரன்







