நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த கே.டி.ராமாராவ்

நியாய விலைக் கடையில் ஆய்வு செய்த பின்னர் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஸ்ட் பிள்ளையிடம் பல கேள்விகளை எழுப்பினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக…

நியாய விலைக் கடையில் ஆய்வு செய்த பின்னர் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஸ்ட் பிள்ளையிடம் பல கேள்விகளை எழுப்பினார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இல்லை என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமனை தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தெலங்கானா, நாட்டுக்காக வரியாக நிறைய பங்களிக்கிறது. ஆனால், ஒவ்வொரு ரூபாய்க்கும் 46 பைசா தான் எங்கள் மாநிலத்துக்கு திரும்பிக் கிடைக்கிறது. மேடம், பேனர் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

2020-21 ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ.46,117 கோடியை தெலங்கானா அளித்தது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து ரூ.28,163 கோடி தான் கிடைத்தது என்று கே.டி.ராமாராவ் தெரிவித்தார்.

மேலும், டுவிட்டரில் தெலங்கானாவிலிருந்து மத்திய அரசுக்கு வரிகள் கிடைக்கப் பெற்றதையும் திரும்பப் பெறப்பட்ட புள்ளி விவரங்கலையும் ராமாராவ் குறிப்பிட்டுள்ளார்.

Image

இதனிடையே, NFSA (தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்) கீழ் 50 முதல் 55 சதவீத கார்டுதாரர்களுக்கு மட்டுமே மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசியை ஒரு கிலோ ரூ.3 வீதம் மத்திய அரசு வழங்குவதாகவும், மீதமுள்ள 45-50 சதவீத மக்களுக்கு தெலங்கானா அரசு வழங்குவதாக தெலுங்கானா அமைச்சர் டி ஹரிஷ் ராவ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.