கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!

கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு, தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியானது.…

கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு, தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த தடை அறிவிப்பை திரும்ப பெற கோரி, கோயம்பேட்டில் உள்ள அங்காடி நிர்வாக அலுவலகம் முன்பு, 200க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கோயம்பேடு நிர்வாக குழு முதன்மை அதிகாரி கோவிந்தராஜன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில்லறை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், 12 ஆம் தேதி வரை அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதாகவும், 12 ஆம் தேதி நட்க்கும் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்றார். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றது. 12 ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.