இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடைபெற்ற போரில் இந்திய வெற்றியை போற்றும் பொன்விழா கொண்டாட்டம் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.
கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் தொடங்கியது.

டெல்லி போர் நினைவு சதுக்கத்திலிருந்து நான்கு வெற்றி ஜோதிகள் ஏற்றப்பட்டு நாட்டின் நான்கு திசைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்த வெற்றி தீபத்தை துறைமுக தலைவர், ரவீந்திரனிடம், லெஃப்டினன்ட் ஜெனரல் அருண் வழங்கினார்.

பாகிஸ்தானுடனான போரின்போது பல்வேறு தியாகங்கள் செய்த வீரர்களுக்கு பொன்னாடை போர்த்தி நிகழ்ச்சியில் கௌரவப்படுத்தப்பட்டது. தொடர்ந்து
செய்தியாளர்களிடம் பேசிய துறைமுக தலைவர் ரவீந்திரன், வெற்றி தீபம் சென்னையில் இன்னும் பத்து நாட்கள் இருக்கும் எனவும், இந்த தீபத்தை பொதுமக்கள்
காணும் வகையில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.







