யூடியூப் சேனல்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

யூடியூப் சேனல்கள், செய்தி இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது அதிருப்தி அளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரணமா தெரிவித்துள்ளார். சில காட்சி மற்றும் அச்சு ஊடகங்களால் நிஜாமுதீன் மர்கஸ் விவகாரம் மதவாதமாக்கப்படுவதைத் தடுக்கக் கோரி…

யூடியூப் சேனல்கள், செய்தி இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது அதிருப்தி அளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரணமா தெரிவித்துள்ளார்.

சில காட்சி மற்றும் அச்சு ஊடகங்களால் நிஜாமுதீன் மர்கஸ் விவகாரம் மதவாதமாக்கப்படுவதைத் தடுக்கக் கோரி இஸ்லாமிய அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூப் சேனல்கள், செய்தி இணையத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அதிகாரமிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே அவை எதிரொலிப்பதாகவும், எந்த பொறுப்புமின்றி, நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக அவர்கள் பதிவிட்டு வருவதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும், இதுபோன்ற யூடியூப் சேனல்களை முறைப்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறதா என கேள்வி எழுப்பினார். அப்போது, பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இவை கையாளப்படும் என பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.