‘இடா’ புயல் தாக்கம்; நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் ‘இடா’ புயல்’ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் ‘இடா’ புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாகாணங்கள்…

அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் ‘இடா’ புயல்’ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் ‘இடா’ புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தெருக்களில் வெள்ளபெருக்கு கடைபிரண்டு ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

 

நியூயார்க் அவசர அறிவிப்பு பக்கத்தின் ட்விட்டர் பக்கத்தில், “வீட்டிலேயே இருங்கள்.  பலத்த காற்றால் சிதைந்த பொருள்கள் பறந்துவந்த மக்களை தாக்க வாய்ப்புள்ளது. அதனால், பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஹாலிவுட் படங்களில் வரும் அனிமேஷன் காட்சிகளையே மிஞ்சும் அளவிற்கு உள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.