பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய முழு சூரிய கிரகண நிகழ்வையொட்டி பொதுமக்கள் கண்டு களிக்க கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பால்வெளி மண்டலத்தில் உள்ள நமது பூமி,சூரியன்,நிலா போன்றவற்றின் சுழற்சியால் அவ்வப்போது வானில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகின்றன.ஆண்டின் சில நேரங்களில் இவை ஏற்பட்டாலும் சில கிரகணங்கள் மட்டும் அதிசயமாக வானியல் ஆய்வாளர்களால் அறியப்படுகின்றன.அதன் காரணம் அவை பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதாலோ அல்லது முழு கிரணங்களாக தோன்றுவதாலோ ஆகும்.அதன் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சூரிய கிரகணம் மிக அரிதான வான் நிகழ்வாக கருதப்படுகின்றது.
இக்கிரணம் இந்தியாவில் உள்ளவர்களால் காண இயலாது.ஆஸ்திரேலியாவில்
மட்டுமே இது காணப்படும். எனினும் இதனை இங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனை கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தினர் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர். காலை 7.24 மணிக்கு துவங்கிய கிரகணம் மாலை 5 மணி வரை நிகழ இருக்கிறது. இந்த அரிய சூரிய கிரகணம் அடுத்து 149 ஆண்டுகள் கழித்து 2172 ல் தான் நிகழும் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
இந்த கிரகணம்தான் இந்த நூற்றாண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் என்றும் பெங்களூர் வான் இயற்பியல் ஆராய்ச்சி மைய அறிஞர் ரவீந்திட பண்யால் நேரலையில் மக்களுக்கு விளக்கினார்.
—வேந்தன்







