தேவகோட்டை அருகே விமரிசையாக நடைபெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி போட்டி!

தேவகோட்டை அருகே ஆறாவயலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு,குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம்‌ நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகே ஆறாவயல் வீர காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 22 ஆம் ஆண்டு, குதிரை மற்றும்…

தேவகோட்டை அருகே ஆறாவயலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு,குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம்‌ நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகே ஆறாவயல் வீர காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 22 ஆம் ஆண்டு, குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.

பெரியமாடு, மற்றும் குதிரை வண்டிகளுக்கு 10 மைல் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது‌. பெரியமாடு பிரிவில் வெளிமுத்தி வாகினி மாடுகளும், குதிரை வண்டி போட்டியில் உஞ்சனை புதுவயலை சேர்ந்த குதிரையும் முதலாவதாக வந்து பரிசினை வென்றன.

ஆறாவயல்- காரைக்குடி சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிபந்தயத்தை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், அதன் சாரதிகளுக்கும், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.

— சே‌. அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.