முக்கியச் செய்திகள் விளையாட்டு

பெங்களூரு அணியை வீழ்த்துமா கொல்கத்தா?

ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 9- ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மே 3- ஆம் தேதியுடன் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்குகியது. சென்னை, மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், அபுதாபியில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி இந்தியாவில் நடந்த நடந்த 7 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் பெங்களூரு அணி 14 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன் 

Ezhilarasan

பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Gayathri Venkatesan

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

Halley karthi