’என் ரோஜா நீ தான்..’ பாடலை தொடர்ந்து ”குஷி” படத்தின் இரண்டாம் பாடலின் ப்ரோமோ வெளியீடு!

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் “குஷி”  படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய்…

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் “குஷி”  படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஷி’. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படத்தை, இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார்.  தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரோஜா நீதான் எனத் தொடங்கும் பாடல் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி 7 கோடி பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

https://twitter.com/TheDeverakonda/status/1678352531980959746

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஆராத்யா என்கிற இரண்டாவது சிங்கிள் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முழு பாடல் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோவை நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.