முக்கியச் செய்திகள் சினிமா

‘கே ஜி எஃப்’ இயக்குனரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரசிகர்களுக்குச் சுதந்திர தின பரிசை அளித்த ‘சலார்’ படக்குழு. புதிய போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை அறிவித்த பிரபாஸின் ‘சலார்’ படக் குழு.

‘கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளரும், பாகுபலி’ படப் புகழ் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாசும் இணைந்து உருவாக்கி வரும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து, புதிய போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படைப்பு ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது. முழு நீள ஆக்சன் படமான ‘சலார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, பெரும் தாக்கத்தையும், நேர்மறையான அதிர்வையும் ஏற்படுத்தி இருந்தது.‘சலார்’ படத்தில் பிரபாஸின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தைக் காண்பதற்காக ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தார்கள். ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, உடன் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

‘சலார்’ திரைப்படம் – இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அதிரடி ஆக்சன் மற்றும் சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும். இந்த படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த குழுவும் திட்டமிட்டபடி இயங்கி வருகிறது. இப்படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், தயாரிப்பாளர்கள் இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். இதன் காரணமாக தற்போது ‘சலார்’ படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்குப் பிறகு அப்படத்தினை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பரிச்சயமான பெயராகிவிட்டது. அத்துடன் பான் இந்திய படங்களை இயக்குவதில் முத்திரை பதித்த இயக்குநர் என்ற அடையாளமும் கிடைத்துவிட்டது. இதன் காரணமாக ‘சலார்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு, நம்பிக்கைக்குரிய வகையில் அதிகரித்து வருகிறது.பான் இந்திய அளவிலான வெற்றியைச் சுவைத்திருக்கும் பிரபாஸ் நடிப்பில், எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் சலாரும் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பாகுபலி’, :கே ஜி எஃப்’ என இந்தியத் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அளித்திருக்கும் இந்த கூட்டணி, மீண்டும் சரித்திர வெற்றியை உருவாக்க இணைந்திருப்பதால், ‘சலார்’ திரைப்படத்திற்குத் தேசிய அளவில் பெரும் கவனம் கிடைத்துள்ளது. ‘கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், ‘பாகுபலி’ படத்தின் நாயகன் பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோர் இணைந்து ஆக்சன் காட்சிகளுடன் சாகசங்கள் நிறைந்த வெகுஜன பார்வையாளர்களின் கற்பனைக்கு எட்டாத வகையில் தரமான படைப்பை வழங்க முழு வீச்சில் தயாராகி வருகிறார்கள்.

‘சலார்’ – என்பது இந்தியத் திரை உலகின் இரண்டு மாபெரும் பிம்பங்களின் கலவையாகும். முதன்முறையாக ஹோம்பாலே பிலிம்ஸ், ‘கே ஜி எஃப்’ இயக்குநர், ‘கே ஜி எஃப்’பில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் ஆகியோர் இணைந்து, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகமான படைப்பை வழங்க உள்ளனர். 2023 ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி பெறும் திரைப்படமாக ‘சலார்’ அமையும்.‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்த ஆண்டில் சலாரை வெளியிடத் தயாராகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று ‘சலார்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே ‘சலார்’ திரைப்படம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட படைப்பாகத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!

Web Editor

”அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

G SaravanaKumar

‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

Halley Karthik