அம்பத்தூர் KFC உணவகத்தில் ஆர்டர் செய்த ‘ஸ்மோக்கி கிரில் சிக்கன்’ ஐ உண்ண முயன்றபோது அது வேக வைக்காமலிருந்ததைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் செயலியிலிருந்து KFC ல் ‘ஸ்மோக்கி கிரில் சிக்கன்’ ஐ ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யப்பட்ட உணவு டெலிவரி செய்யப்பட்ட நிலையில், வாடிக்கையாளர் அதனை உண்ண முயன்றபோது அது வேக வைக்காமலிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில் எந்தவித பதிலும் அளிக்காததால் தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றிப் பதிவிட்டு SWIGGY நிறுவனம், KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) ஆகியவற்றை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஸ்விகி மற்றும் KFC நிறுவனங்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.