முக்கியச் செய்திகள் குற்றம்

கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை

கேரளாவை சேர்ந்தப் பெண் ஒருவர், பழனி கோயிலுக்கு சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது கடந்த மாதம் பழனி கோயிலுக்கு சென்ற போது தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறியதால், உடனடியாக கண்ணூர் போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 19ஆம் தேதி பழனிக்கு சென்றபோது, மூன்று பேர் தனது கணவரை தாக்கிவிட்டு, தன்னை கடத்திச்சென்று அருகே இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றபோது போலீசார், மனுவை வாங்க மறுத்து அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது!

முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு

Halley karthi

”மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை”- கார்த்தி சிதம்பரம்!

Jayapriya