நடிகர் சூர்யாவின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் சூரரைப் போற்று திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து கடந்தாண்டு அமேசான் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், விநியோகிஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் திருப்திபடுத்தியது.
படத்தில் மாறா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாப்பாத்திரமாகவே சூர்யா வாழ்ந்திருந்தார். ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று என படத்தின் கதைக்களமாக இருந்தது.
இந்நிலையில், இந்தப்படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க உள்ளார். சூரரைப் போற்று இந்தி திரைப்படத்தை: சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.








