கேரளா நிலச்சரிவு வேதனை அளிக்கிறது; கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் நெருக்கடியான சூழலில் கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்…

பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் நெருக்கடியான சூழலில் கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.

இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் உதவிகளை கேரளாவிற்கு வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.