சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 10,008 பழங்களால் அலங்காரம்!

சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வழங்கிய 10,008 பழகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம, சின்னாளபட்டி ஸ்ரீ அஞ்சலி வரத விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சித்திரை மாதம்…

சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வழங்கிய 10,008 பழகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம, சின்னாளபட்டி ஸ்ரீ அஞ்சலி வரத விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சித்திரை மாதம் பிறப்பை முன்னிட்டு 10,008 பழக்காப்பு ஆலங்காரத்தில் வீற்றியிருந்த சுவாமியின் திருமேனி முழுவதும் பசு வெண்ணையினால் பூசப்பட்டு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வருடத்தில் ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் வழங்கப்பட்ட ஆப்பிள், அன்னாசி, கொய்யா, மாங்கினி, திராட்சை மற்றும் பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களை கொண்டு அஞ்சநேயருக்கு பழகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த அலங்காரத்தில் சுவாமியை தரிசனம் செய்வதன் மூலமாக பழங்கள் கனிவது போல ஆஞ்சநேயர் மனமும் கனிந்து பக்தர்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஜதீகமாக உள்ளது.

இன்று போல் ஆண்டு முழுவதும் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் பக்தர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. இக்காட்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் சென்றனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.