கேரளாவில் அரங்கேறிய ருசிகரம் – முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம்

கேரளாவில் மனிதர்களை போன்று வளர்ப்பு பிராணிகளுக்கு வரன்பாரத்து திருமணம் நடத்தி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், திருச்சூர் வாடான பள்ளியை சேர்ந்த ஷெல்லி-நிஷா தம்பதினர் தங்கள் வீட்டில் பிஹில்…

கேரளாவில் மனிதர்களை போன்று வளர்ப்பு பிராணிகளுக்கு வரன்பாரத்து திருமணம் நடத்தி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் வாடான பள்ளியை சேர்ந்த ஷெல்லி-நிஷா தம்பதினர் தங்கள் வீட்டில் பிஹில் வகையைச் சேர்ந்த ஆண் நாயை ஆக்சிட் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். தங்களது வளர்ப்பு நாயான ஆக்சிட்க்கு ஒன்றை வயதை நெருங்கியதால் அதற்கு மனிதர்களுக்கு போன்று திருமணம் நடத்த எண்ணிய தம்பதியினர் புரோக்கர் மூலம் வரன்பார்த்துள்ளனர்.

இதனிடையே புன்னையர் குளம் பகுதியில் உள்ள வீட்டில் இதே இனத்தை சேர்ந்த ஜான்வி என்ற ஒன்றரை வயது நாய் குட்டி இருப்பதை அறிந்துள்ளனர். பின்னர் இருவீட்டரும் ஆக்சிட் மற்றும் ஜான்வி திருமணத்தை நடத்த முடிவெடுத்து, குன்னத்தூர்மலை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியை திருமண வீடாகவே அலங்கரித்த பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினர்.

முன்னதாக, காரில் அழைத்து வரப்பட்ட ஆக்சிட்க்கு பட்டு வேட்டி சட்டை, மலர் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட கூடையில் அமரவைத்து அழைத்துவந்தனர். அதே போல் ஜான்விக்கும் பட்டு பாவாடை, மலர் மாலை அணிவித்து அழைத்து வந்தனர். இருவருக்கும் மலர் மாலை மாற்றி திருமணம் நடத்திவைக்கப்பட்டு, கேக் வெட்டி பரிமாறப்பட்டது. இது மட்டுமல்லாமல் திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி உணவாக வழங்கப்பட்டது. இந்த திருமண விழாவில் கொரோனா நெறிமுறைகளுடன் இரு வீட்டார் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.