முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

’பள்ளியோடம்’ படகில் ஜீன்ஸ், ஷூவுடன் போட்டோ ஷூட்: சீரியல் நடிகை கைது

’பள்ளியோட’த்தில் ஜீன்ஸ், ஷூவுடன் அமர்ந்தபடி சீரியல் நடிகை போட்டோஷூட் எடுத்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

பிரபல மலையாள சீரியல் நடிகை நிமிஷா பிஜோ. சோஷியல் மீடியாவில் பிரபலமாக உள்ள
இவர், தனது நண்பர் உன்னி என்பவருடன் இணைந்து சில தினங்களுக்கு முன்பு போட் டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அதாவது பள்ளியோடத்தில் ( பாம்பு போல நீண்ட
வடிவில் இருக்கும் படகு) நின்று ஷூ அணிந்து புகைப்படம் எடுத்தார். பின்னர் அதை சமூக
வலைதளத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையானது.

இந்த பாம்பு வடிவ படகுகள், கோயில்களுக்குச் சொந்தமானவை. இதை விழாக்காலங்களில்
மட்டுமே கேரளாவில் பயன்படுத்துவது வழக்கம். நடிகை நிமிஷா பயன்படுத்தியது, அரன் முலா பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான படகு. இந்தப் படகு பத்தினம்திட்டாவில் உள்ள பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படுவது.

இந்த படகு அங்கு புனிதமாகவே பார்க்கிறார்கள். இதில் ஏறும் முன் பூஜை செய்ய வேண்டும் என்றும் வேஷ்டி, முண்டு அணிந்தே இதில் ஏற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் படகில் நடிகை நிமிஷா ஜீன்ஸ் மற்றும் ஷு அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்ததை அடுத்து, கோயில் தேவஸ்தானம் நடிகை மீது புகார் அளித்தது.

இதையடுத்து நடிகை நிமிஷா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக நடிகை நிமிஷா தெரிவித்திருந்தார்.

Advertisement:
SHARE

Related posts

அகழாய்வு: ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுப்பு

Vandhana

தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்

Jeba Arul Robinson

மீண்டும் வெடித்த ‘கர்ணன்’ விவகாரம்; உதயநிதி ட்வீட்!

Halley karthi