வேகத்தைத் தொடருங்கள், வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள் பிரக்ஞானந்தா : முதலமைச்சர் மு-க. ஸ்டாலின் வாழ்த்து!

வேகத்தைத் தொடருங்கள், வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள் என பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம்…

வேகத்தைத் தொடருங்கள், வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள் என பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனையடுத்து நேற்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர் பயின்ற வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களும் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் பிரக்ஞானந்தா சந்தித்தார். அப்போது தாம் வென்ற வெள்ளிப் பதக்கத்தை முதல்வரின் கையில் கொடுத்து அதனை பிரக்ஞானந்தா பெற்றுக் கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரக்ஞானந்தாவிடம் வழங்கினார்.

இந்நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

புத்திசாலித்தனமான இளம் மனதை சந்தித்ததில் மகிழ்ச்சி, வெற்றியுடன் சென்னை திரும்புகையில் பிரக்ஞானந்தாவின் சாதனைகள் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பெருமை சேர்க்கிறது. பிரக்ஞானந்தாவுக்கு நினைவு பரிசு மற்றும் 30 லட்சம் ரூபாய் வெகுமதியுடன் பாராட்டிய பெருமை எனக்கு கிடைத்தது. விளையாட்டில் இளம் திறமைகளை வளர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. வேகத்தைத் தொடருங்கள், வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள், பிராக் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.