ஜவுளித்தொழிலில் ஆர்வமுள்ளவரா நீங்கள்! இதோ உங்களுக்கான செய்தி…. ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவை தொடங்கியது தமிழ்நாடு அரசு!

ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையிலும், துறையில் மேலும் சாதிக்கும் வகையிலுமாக ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.  அதன்படி, ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசு, அரசின்…

ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையிலும், துறையில் மேலும் சாதிக்கும் வகையிலுமாக ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. 

அதன்படி, ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசு, அரசின் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் “ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவு” (Textile Promotion Cell) தொடங்கியுள்ளது.

ஜவுளித்துறையில் ஆர்வம் உள்ளோர் 044-45020017 / 107 / 111 மற்றும் 7904378336 / 9488722622 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த அலுவலகம் ​​முற்பகல் 10.30 மணி – பிற்பகல் 1.00 மணி வரையிலும், பிறகு 2.00 மணி – 5.30 மணி வரை செயல்படும்.

இதன் நோக்கம் ஜவுளித்துறை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம், வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல், ஆராய்ச்சி என பல்வேறு உதவிகளை வழங்குவது ஆகும். மேலும் தொழில்நுட்ப ஜவுளிகள் சார்ந்த விவரம் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்த முழு காணொலியை கீழே காணலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.