முக்கியச் செய்திகள் தமிழகம்

கீழடி அருங்காட்சியகம் முன்மாதிரி அருங்காட்சியகமாக அமையும்-சு.வெங்கடேசன் எம்.பி.

கீழடி அருங்காட்சியகம் முன்மாதிரி அருங்காட்சியகமாக அமையும் என்று மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரை மற்றும் தென்மாவட்டங்களின் கனவுத்திட்டம் டைடல் பார்க். 16 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கு பிறகு எந்தவிதமான தொழில் அறிவிப்பும் இல்லை.

தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் 600 கோடி ரூபாயில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தையும், மதுரைக்கும் தென்மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் ஒரு தலைமுறைக்கு பின் அறிவிக்கப்பட்ட பெரிய அறிவிப்பாகும்.

இது இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான் முதல்வரை சந்தித்து அளித்த 21 கோரிக்கைகளில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மதுரை மத்திய சிறைச்சாலை இடமாற்றம், சிப்காட் அமைத்தல், தொழில்நுட்ப பூங்கா அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரையின் அடிக்கட்டமைப்புகள் சாலை, குடிநீர், வடிகால் அமைப்புகளை சரி செய்ய விரைவில் நல்ல அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என நம்புகிறேன். கீழடி அருங்காட்சியக வேலையை ஒவ்வொரு முறை மதுரை வரும் போது முதல்வர் விசாரிக்கிறார்.

கீழடி அருங்காட்சியக வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலேயே முன்மாதிரியான அருங்காட்சியமாக கீழடி அருங்காட்சியகம் அமையும்.

விரைவாக கீழடி அருங்காட்சியகத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர் அதை திறந்து வைப்பார். கீழடி அகழாய்வு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. நேற்று அகழாய்வில் கிடைத்த தங்கத்திலான மணி மிகுந்த ஆச்சிரியத்தை தருகிறது.

பத்தாண்டு கீழடி அகழாய்வு நடைபெறும் நிலையில், பத்தாண்டுக்கு பிறகும் புதிய புதிய பொருள் கிடைத்து கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

பெரும் நாகரீகத்தின், பெரும் நகரத்தின் அமைவு கீழடி என சொன்னது சான்றுகளாய் கிடைத்து வருகிறது.

தமிழ் நாகரீகத்தின் பழமையினுடைய மணிஓசை ஒவ்வொரு நாளும் அகழாய்வு வழியாக ஒலித்து கொண்டுள்ளது. நிச்சயமாக கீழடி அருங்காட்சியகம் முன்மாதிரி அருங்காட்சியகமாக அமையும் என்றார் வெங்கடேசன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாகன விபத்தில் குத்துசண்டை வீரர் பலி!

Niruban Chakkaaravarthi

சிம்புவுக்கு இதுதான் மிகப்பெரிய ஓபனிங்!

EZHILARASAN D

பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar