கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி கள், பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கப்பட்டது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதியில் விரிவான முறையில் நடைபெற்ற அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, கருப்பு சிகப்பு பானை ஓடுகள், சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெறு கிறது. மேலும், அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்பட்ட தொன்மையான பொருட்க ளை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.
இதேபோன்று, தூத் துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதியில் கடந்த 6 மாதங் களாக நடைபெற்று வந்த தொல்லியல்துறை அகழாய்வு பணி கள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.
3 இடங்களில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிவகளை யில் அடுத்தாண்டும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளும், கொற்கையில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









