கஜகஸ்தானில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள நாடு கஜகஸ்தான். இங்கு அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான அல்மட்டியில் வசித்து வந்த ஒருவரை அவரது வீட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை வெளியேற்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த நபர் யாரும் எதிர்பாராத வண்ணம் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இதில், 2 போலீசார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் கைது செய்யப்பட்டார். அந்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை







