யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை

ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாசின் மாலிக் மீது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி திரட்டுதல்,…

ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாசின் மாலிக் மீது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி திரட்டுதல், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு சதித் திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருத்தல், குற்ற சதி, தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மே 10ஆம் தேதி விசராணைக்கு வந்தது. அப்போது, அனைத்து குற்றச்சாட்டுகளையும் யாசின் மாலிக் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என்று சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் மே 19 அன்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், இன்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.