காஷ்மீர் விஷயத்தில் இஸ்லாமிய நாடுகள் தோல்வி அடைந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய இம்ரான் கான், சர்வதேச விளையாட்டு வீரராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மேற்கத்திய நாடுகளின் நாகரீகத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளேன். இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் இஸ்லமிய வெறுப்பு மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனம் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் தோல்வி அடைந்துவிட்டது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இம்ரான் கான் , காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. இதன் காரணமாகவே, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் அறிக்கையை இந்தியா கண்டுகொள்வதில்லை என கூறினார். மேலும், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பை மேற்கத்திய நாடுகள் மதிப்பதில்லை. இஸ்லாமிய நாடுகள் பிரிந்து கிடப்பதுதான் இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.







