ராக்கெட்ரி மற்றும் காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட படங்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் என நடிகர் மாதவன் கருத்து தெரிவித்துள்ளார்.
‘தோக்கா ரவுண்ட் டி கார்னர்’ படத்தை விளம்பரப்படுத்தி வரும் நடிகர் மாதவன், சமீபத்தில் இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையைப் பற்றி பேசியுள்ளார். அப்போது, ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ மற்றும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஆகிய படங்களும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படங்கள் என கூறினார்.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள குஜராத்தி திரைப்படமான ‘செல்லோ ஷோ’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மாதவன் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்கள் வெற்றி பெற்று இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். திரைப்படத் துறையிலும் நாம் சிறப்பாக செயல்பட வேண்டிய நேரம் இது என்றார்.

ஆஸ்கர் விருது மீது உள்ள வித்தியாசம் என்ன என்பது பற்றி பேசிய நடிகர் மாதவன், மேற்கத்திய நாடுகளில் அதைப் பெறும் எவருக்கும், அவர்களின் வசதி, வருமானம், சம்பளம், போன்ற அடிப்படியில் தீர்மானிப்பதில்லை என்றும் அவர்கள் தொழில்துறையில் முன்னேறும் விதத்தில் தான் முன்னேற்றம் உள்ளது என்றும் கூறினார்.







