முக்கியச் செய்திகள் தமிழகம்

துறைமுகங்கள் மசோதா: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும், சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும் என்பதால், மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இந்தத் துறை மாநில அரசுகளால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடற்கரை கொண்டுள்ள மாநிலங்களும், துறைமுகங்கள் தொடர்புடைய பிறரும் சில யோசனைகளை முன்வைத்த பிறகும், இன்னமும் திருத்த மசோதா அப்படியே இருக்கிறது.
மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் சிறு துறைமுகங்கள் மத்திய அரசு நிர்வகிக்கும் பெரிய துறைமுகங்களைக் காட்டிலும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதற்கான காரணம் தனியார் முதலீடுகளையும், எளிதான கொள்கைகளையும் மாநில அரசுகள் வகுத்ததுதான்.

குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் அத்தகைய மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.
இந்த வரைவு மசோதா, அத்தகைய குறிப்பிட்ட முன்முயற்சிகளை முடக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிறு துறைமுகங்களுக்கான ஒழுங்கு முறை அமைப்பான கடல்சார் மாநில வளர்ச்சிக் கவுன்சிலில் சில முக்கியமான அம்சங்களை மாற்றும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
ஆலோசனை அமைப்பாக இருக்கும் அந்த அமைப்பை ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றும்போது மாநில அரசுகளின் அதிகாரிகள் நிச்சயம் பறிக்கப்படும்.

இதன்காரணமாக சிறு துறைமுகங்களின் வளர்ச்சி எதிர்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம் என்பதுடன் சிறு துறைமுகங்களில் வணிகம் செய்வது எளிதாவதை அதிகரிப்பதை தாங்கள் (பிரதமர் மோடி) தலையிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

G SaravanaKumar

விரைவில் ஆச்சரியமான ஓர் அறிவிப்பு – துரை வைகோ புதிய தகவல்

Web Editor

கோடநாடு வழக்கு: 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

EZHILARASAN D