பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தவரும் இலங்கை முன்னாள் அமைச்சருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், ஈழத் தமிழர்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்தது குறித்து இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா தற்போது கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் களத்தில் மடிந்தது என்பது உண்மையான விஷயம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தவறான வதந்திகளைப் பரப்பி உலக மக்களை முட்டாளாக்கும் செயலாகத் தான் பழ.நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை பார்க்கிறேன் என கருணா தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








