‘கங்குவா’ திரைப்படத்தில் சூர்யாவுடன் கார்த்தியும் நடித்துள்ளார்?

நடிகர் கார்த்தி ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி,…

நடிகர் கார்த்தி ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த திரைப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படியுங்கள் : தொடரும் வரதட்சணை கொடுமை : கர்ப்பிணியை கொலை செய்து எரித்த குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

இந்நிலையில், நடிகர் கார்த்தி ‘ஜப்பான்’ திரைப்படத்தின் தோல்விக்குப் பின் கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவர் நடித்து முடித்த மெய்யழகன், வா வாத்தியார் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில், நடிகர் கார்த்தி தன் அண்ணன் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.