கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்பது எழுதப்படாத விதியாகும். அந்த வகையில் இந்த வருட தீபாவளிப் பண்டிகையை நிறைய படங்கள் குறிவைக்கின்றன. அந்த வரிசையில் தற்போது கார்த்தியும் இணைந்துள்ளார்.
நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சர்தார் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி இருந்தது. ஏற்கனவே படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இணையத்தில் லீக்கான போஸ்டர் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் சர்தார் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் படக்குழு தரப்பில் தெரிவித்துள்ளது.







