32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நிபா வைரஸ் பரவல் : புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு!

நிபா வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லை பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிராந்திய நிர்வாகம்.

அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 100 பேருக்கு மேல் பங்கேற்க்கக் கூடாது, காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருபவர்களை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும், நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அனைத்து துறையினரும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

இலங்கை மக்களுக்கு உதவ காவல்துறையினர் முன்வரவேண்டும் – டிஜிபி

Arivazhagan Chinnasamy

ஒய்எஸ்ஆர் காங். – தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே மோதல்!

Web Editor

தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறை

EZHILARASAN D