”காவிரி விவகாரத்தில் கர்நாடக பாஜகவினர் அரசியலுக்காக போராட்டம்!” – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

காவிரி விவகாரத்தில் கர்நாடக பாஜகவினர் அரசியலுக்காக போராட்டம் நடத்தியதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆரிமுத்து மோட்டூரில் நியாய விலைக்கடை, அம்முண்டி பகுதியில் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.…

காவிரி விவகாரத்தில் கர்நாடக பாஜகவினர் அரசியலுக்காக போராட்டம் நடத்தியதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆரிமுத்து மோட்டூரில் நியாய விலைக்கடை, அம்முண்டி பகுதியில் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாடு அரசு தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரை கேட்கிறது. ஆனால் கர்நாடகா அரசு உரிமையில்லாத ஒரு போராட்டத்தில் தமிழ்நாட்டை இழுக்க பார்க்கிறது.

தமிழ்நாட்டுக்கு 50 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது என்றும், கர்நாடகாவுக்கு தண்ணீர் தேவை என்றால் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு 17 ஆண்டுகள் நீதிமன்ற வழக்குகளில் ஒருநாள்கூட மேகதாது வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.