தமிழ்நாடு முழுவதும் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் இன்று தொடங்கி வைக்கிறார்!

காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் தொடங்கி வைக்கிறார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த…

காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் தொடங்கி வைக்கிறார்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545 தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்த, அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.