முக்கியச் செய்திகள் இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தல்; நோட்டாவை தேர்வு செய்த 2.6 லட்சம் வாக்காளர்கள் -தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடகா  தேர்தலில் வாக்களித்த 3.84 கோடி பேரில் 2,59,278 – அதாவது மொத்தமாக வாக்களித்தவர்களில்  0.7 சதவீதம் பேர் நோட்டாவில் வாக்களித்துள்ளனர். 

கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில், 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், மே 10ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய 2.6 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், ‘மேற்கண்ட எதுவும் இல்லை’ அல்லது நோட்டா என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்தாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) நோட்டா விருப்பம் 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 2013 இல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு குழுவில் கடைசி விருப்பமாக EVMகளில் நோட்டா பொத்தானைச் சேர்த்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரயில்வே எழுத்தருக்கு இருக்கையை தந்து கவுரவித்த மேலாளர்

Web Editor

வேளாண், சிஏஏ சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்: முதலமைச்சர்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி

EZHILARASAN D