சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் தோல்வியடந்த இந்திய வீராங்கனை கர்மன் சில மணி நேரங்களிலேயே இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.
உலக மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.டி.எ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற இந்த டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி ஆகியோர் களமிறங்கினர்.
இதில் அங்கிதா ரெய்னா தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே ஜெர்மன் நாட்டை சேர்ந்த தட்ஜனா மரியாவிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனை கர்மன் தண்டி, நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் கனடா வீராங்கனை யூஜெனி பவுச்சார்ட் உடன் மோதினார். இதில் கர்மன் தண்டி 2-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியுற்றார்.
இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.
மேலும் காலிறுதி வாய்ப்பை நழுவ விட்ட கர்மன், இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இரட்டையர் பிரிவில் ருதுஜா போஸ்லா உடன் ஜோடி சேர்ந்த கர்மன், இந்தியாவின் பிரார்த்தனா தோம்பர் மற்றும் இந்தோனேசியா வீராங்கனை ஜெஸ்ஸி ரோம்பீஸ் இணையை 3-6, 7-6, 10-4 என வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றி வெற்றி பெற்றனர். இதன் மூலம் ருதுஜா போஸ்லா, கர்மன் இணை, இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
COMEBACK COMPLETE!!
At 1-05 AM, @RutujaBhosale12 and @KarmanThandi come from 3-6, 2-5 down to beat Prarthana Thombare and Jessy Rompies 3-6, 7-6, 10-4 in one hour and 55 minutes to move into the #WTA #ChennaiOpen quarter-finals pic.twitter.com/Xybtoigsy4— Chennai Open Tennis (@chennaiopenwta) September 14, 2022







