காற்று மாசை ஏற்படுத்துவதாக கூறி தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி துறைமுகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது. இங்கிருந்து நாட்டின் பல…

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி துறைமுகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தனியாருக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளில் உள்ள பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதைபோல நமது நாட்டிற்கு தேவையான பொருட்கள் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் இத்துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களால் அதன் அருகில் உள்ள கிராமங்களில் காற்று மாசு ஏற்படுவதாகவும், மேலும் இங்கிருந்து வெளியேறும் காற்று மாசினால் இப்பகுதி மக்களுக்கு சுவாச குழாய் தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது என்று கூறிய அப் பகுதி மக்கள் திடீரென துறைமுக வாயிலில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.