வரதட்சணை கேட்கும் கணவருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (28). வழக்கறிஞரான இவருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக பெண் வழக்கறிஞர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (28). வழக்கறிஞரான இவருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பிரியதர்ஷினி, ராஜ ஷெரின் திருமணத்தின்போது

திருமணத்தின்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம், சொத்துகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு ராஜ ஷெரினின் குடும்பத்தினர் பிரியதர்ஷினியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரியதர்ஷினியை வீட்டில் தவிக்க விட்டு ராஜ ஷெரின் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதையடுத்து, கணவரின் வீட்டிற்கு சென்ற பிரியதர்ஷினி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கூறி வீட்டின் முன்பு கதறி அழுதார். தகவலறிந்து வந்த தக்கலை காவல்துறையினர், பிரியதர்ஷினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பிரியதர்ஷினி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கூறி கொட்டும் மழையில் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.