கன்னடத்தில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  தற்போது கன்னட திரையுலகில் கால் பதிக்கிறார்.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். …

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  தற்போது கன்னட திரையுலகில் கால் பதிக்கிறார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  வடசென்னை,  காக்கா முட்டை,  கனா,  தர்மதுரை,  ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.  காக்கா முட்டை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.  தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கன்னடத்தில் கால் பதித்துள்ளார்.

https://twitter.com/aishu_dil/status/1782633718101749782

 

கேஆர்ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.  இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார்.  இப்படத்தில் மலையாள நடிகர் விஜய் பாபு,  ரங்காயண ரகு,  சைத்ரா ஜே. ஆச்சார்,  உமா ஸ்ரீ,  யோகராஜ் பட்,  கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்ட பல  நடிகர்கள் நடிக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.