கோலிக்கு மறைமுக எச்சரிக்கை! ‘X Factor’ கேன் வில்லியம்சனின் அடுத்த இரட்டை சதம்!

பல்வேறு வேரியேஷன்களையும் அழகாக எதிர்கொண்ட கேன் வில்லியம்சனின் Watertight Defence டெஸ்ட் பிரியர்களுக்கு பக்கா ட்ரீட்டாக அமைந்தது

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி, தனது கன்சிஸ்டன்சியை கச்சிதமாக மீண்டும் நிரூபித்து இருக்கிறார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அங்கு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டி20 தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்ற, முதல் டெஸ்ட் போட்டியிலும் 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், முதல் நாளிலேயே 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில், லாதம் 33 ரன்களிலும், டாம் 16 ரன்களிலும் வெளியேறினாலும் கேப்டன் வில்லியம்சன் – ஹென்றி நிகோல்ஸ் பார்ட்னர்ஷிப், பாகிஸ்தானின் Pace அட்டாக் பவுலிங்கை லெஃப்டில் டீல் செய்தது.

ஷாஹீன் அப்ரிடியின் 6 அடி உயரத்தில் இருந்து வந்த Bouncer, In swinger, Reverse swing, Leg cutter, Off cutter, Out swinger என பல்வேறு வேரியேஷன்களையும் அழகாக எதிர்கொண்ட கேன் வில்லியம்சனின் Watertight Defence டெஸ்ட் பிரியர்களுக்கு பக்கா ட்ரீட்டாக அமைந்தது.

அதேசமயம், ஏதுவான பந்துகளையும் தனது ஃபேவரைட் ஸ்ட்ரெய்ட் ஷாட்ஸ் மூலம் அட்டாக் செய்து, டீசண்ட்டான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தார்.

மொத்தமாக 364 பந்துகளை சந்தித்த கேன், 28 பவுண்டரிகளுடன் 238 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரது ஸ்டிரைக் ரேட் 65.38

ஹென்றி நிகோல்ஸ் 291 பந்துகளில் 157 ரன்கள் சேர்க்க, இறுதிக் கட்டத்தில் டேரில் மிட்சல் 112 பந்துகளில் 102 ரன்கள் விளாச, 6 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது நியூஸி. இதனால், அந்த அணி 362 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

அடுத்தடுத்த இரட்டை சதம்

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹேமில்டனில் 251 ரன்கள் எடுத்த கேன் வில்லியம்சன், தற்போது மற்றொரு இரட்டை சதத்தை தனது டிராக் ரெக்கார்டில் இணைத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் 251, 129, 21, 238 என்று சற்றே கொடூரமாக தனது ஆதிக்கத்தை மெயின்டெய்ன் செய்து வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 890 ரேட்டிங்குடன் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், 879 ரேட்டிங்குடன் இந்திய கேப்டன் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியிருக்க, மறுபுறம் வில்லியம்சன் மிகச் சப்தமாக சதம், இரட்டை சதம் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு தவிர்க்க முடியாத ‘X Factor’ என்பதை நிரூபித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply