மகளிர் ஆசிய கோப்பை தொடர்: தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்!

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர், துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா aஅகிய அனிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து ஷபாலி வர்மா அரை சதத்திஅ கடந்து 64 ரன்கள் விளாசினார். அதேபோல பிரதிகா ராவல் 22 ரன்களும், பாரதி புல்மாலி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 159 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய தாய்லாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தாய்லாந்து 65 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.