பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகதான் அரசியல் செய்யும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகதான் அரசியல் செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கிய பின்,…

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகதான் அரசியல் செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கிய பின், அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நியாயவிலைக்கடைகளில் டோக்கன் கொண்டுவந்தால் தான் பரிசுத்தொகுப்பு கொடுப்போம் என்ற நிலை இல்லை என தெரிவித்தார். பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகதான் அரசியல் செய்யும் என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, 2010ஆம் ஆண்டு தேர்தலையொட்டி திமுக பொங்கல் பரிசு வழங்கியதை குறிப்பிட்டார். திமுக ஆட்சியில்தான் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்தினார்கள் என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறைகூறுகின்றனர் என குற்றம்சாட்டினார். ஆனால், அதிமுக வழங்கும் பரிசுத்தொகுப்பில் இரட்டை இலை சின்னமோ, ஜெயலலிதா படமோ இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்தார்.

அமித்ஷா வருகையின்போது அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு இறுதி செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு, அமித்ஷா, துக்ளக் விழாவிற்கு தான் வருகிறார் எனவும், இது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். நாம் அனைவரும் வெளியே இருந்துதான், ஸ்டாலினை பார்க்கிறோம் என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அழகிரி கூடவே வளர்ந்த தம்பி ஸ்டாலின் எனவும், தம்பியின் திறமை, ஆற்றல் என்னவென்று அண்ணனுக்குதான் தெரியும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply